மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த தென்கொரியா.. அவ்வுளவு தான் மரியாதை - வடகொரியா பகிரங்க எச்சரிக்கை.!
தமிழ் பழமொழிக்கேற்ப தென்கொரிய இராணுவ அமைச்சரின் பேச்சால், வடகொரியா தென்கொரியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அணுஆயுத ஏவுகணை சோதனை நடத்திய காரணத்தால் வடகொரியாவின் மீது உலக நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. அமெரிக்கா எச்சரிக்கை மற்றும் ஐ.நா சபையின் தீர்மானங்களை மீறியும் வடகொரியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. உலக நாடுகளின் பொருளாதார தடையினால் அந்நாட்டு மக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடைபெற்றது.
இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில், கடந்த 4 வருடங்களுக்கு பின்னர் வடகொரியா ICBM ஏவுகணை சோதனை நடத்தி இருக்கிறது. இந்த நிலையில், சமீபத்தில் தென்கொரியாவின் இராணுவ அமைச்சர் சூ ஊக், தென்கொரிய ஏவுகணை தளத்திற்கு சென்றிருந்தார். அப்போது, "தென்கொரியா மீது தாக்குதல் நடத்த வடகொரியா திட்டம் வைத்திருப்பின், அந்நாட்டின் மீது துல்லிய தாக்குதல் நடத்துவதற்கான திறனும் தயார் நிலையில் எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, ஆத்திரமடைந்த வடகொரியா தனது பகிரங்க எச்சரிக்கையை பதிவு செய்துள்ளது. வடகொரியாவின் அதிபர் கிம் ஜான் உன்னின் சகோதரி, தென்கொரிய அரசில் முக்கிய இடத்தில் இருக்கும் கிம் யோ ஜாங், "அணு ஆயுதம் வைத்துள்ள நாட்டினை பார்த்து, அழுக்கு நுரை போன்றவர் முன் எச்சரிக்கை கொடுப்பது விவேகம் இல்லாதது. தென்கொரிய இராணுவ அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சுக்கு அச்சுறுத்தலை எதிர்கொள்ளலாம். பேரழிவை தவிர்க்க தென்கொரியா விரும்பும் பட்சத்தில், அது தன்னை முதலில் ஒழுங்குபடுத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.