தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
10 நாள் எவனும் சிரிக்கக்கூடாது, சந்தோசமா இருக்க கூடாது - வடகொரிய அரசு பகீர் அறிவிப்பு.! காரணம் தெரியுமா?.!!
வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
வட கொரிய நாட்டின் அதிபராக இருக்கும் கிங் ஜம் உன்னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல்லின் பத்தாவது வருட நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி, வடகொரியா முழுவதும் 10 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
வரும் பத்து நாட்கள் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி, துக்கம் அனுசரிக்கப்படும் 10 நாட்களுக்கு மக்கள் சிரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் அருந்துதல், வணிக வளாகங்களுக்கு சென்று பொழுதைக் கழிப்பது, மகிழ்ச்சியாக பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற எந்த செயலலிலும் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் இந்த தடையை மீறும் நபர்களின் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.