மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வடகொரியா உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த அதிபர் கிம் ஜாங் உன்: 100% வாக்குகள் பதிவானதாக அறிவிப்பு.!
வடகொரியா நாட்டின் சட்டப்படி, 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாகாண கவர்னர்கள், மேயர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளை தேர்வு செய்யும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
தற்போது 2023ம் ஆண்டில், நவம்பர் 26ம் தேதியான நேற்று ஞாயிற்றுக்கிழமை அங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் வேட்பாளர்கள் தொடர்பான விபரம், அதிபர் கிம் ஜாங் உன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிப்பட்டியல் தயாராகும்.
அந்த வகையில், நடப்பு ஆண்டுக்கான உள்ளாட்சி தேர்தல் 100% வாக்குப்பதிவுடன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதிபர் கிம் ஜாங் உன்னும் தனது வாக்குகளை பதிவு செய்தார்.
வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி அதிபர் கிம் ஜாங் உன் தலைமையில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு அணுஆயுத ஏவுகணை தயாரிப்பில் தனது ஒட்டுமொத்த முதலீடுகளையும் குவிக்கிறது. இதனால் சர்வதேச அளவிலான அமெரிக்காவின் பொருளாதார தடை தொடர்பான பிரச்சனையையும் எதிர்கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.