மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹிஜாப் சரியாக அணியாத மாணவி.. பாதி மொட்டை அடித்து தண்டனை கொடுத்த ஆசிரியர்.!
இந்தோனேசியாவில் மாணவி ஹிஜாப் சரியாக அணியாததால் மொட்டை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தோனேசியா நாட்டின் கிழக்குத் தீவு பகுதியான ஜாவாவில் உள்ள லாமங்கன் பகுதியில் உயர்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் சில இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாதி தலையை மொட்டை அடித்து அசிங்கப்படுத்தியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டதுடன் மாணவிகளுக்கு மொட்டை அடித்த ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இந்த பள்ளியில் ஹிஜாப் அணியாமல் வந்த மாணவிகள் பள்ளியில் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மாணவிகளுக்கு மொட்டை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.