மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட உண்மை காதல்னா இதான்யா... வியக்க வைக்கும் காதல் ஜோடிகள்..!
சீனாவில் ஜியாங்கி மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் வசித்து வருபவர் சௌ என்னும் இளம் பெண். இவர் சமீபத்தில் ஹு என்பவரை சந்தித்துள்ளார். இவர்களது முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரு குடும்பத்தாரின் சம்மதத்துடனுன் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்நிலையில் மணமகனின் குடும்பம் சார்பாக மணமகளுக்கு வழங்கும் 35 லட்சம் பணத்தை ஏற்க மறுத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடைய வருங்கால கணவரின் 21 லட்சம் கடனையும் அடைத்துள்ளார் அந்த இளம் பெண்.
மேலும் இது குறித்து அந்த இளம் பெண் கூறியதாவது காதலில் பணம் முக்கியம் இல்லை என்றும் அன்பு மட்டுமே இறுதிவரை போதும் என்றும் கூறியுள்ளார். மேலும் இவர்களின் உண்மை காதலை இணையதளத்தில் பகிர்ந்துள்ள இவர்கள் இணையவாசிகளின் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர்.