மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருடனுடன் குத்துச்சண்டை போட்ட 77 வயது முதியவர்..! சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சி.!
ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்துவிட்டு வெளியே வரும்போது முதியவர் ஒருவரிடம் திருடன் பணம் பறிக்க முயற்சி செய்ததும், குத்து சண்டை போட்டு அந்த திருடனை முதியவர் விரட்டிய சம்பவம் வீடியோவாக வெளியாகி தற்போது வைரல்கிவருகிறது.
இங்கிலாந்தின் கார்டிப் நகரில் உள்ள ஏ.டி.எம் ஒன்றில் வயதான முதியவர் ஒருவர் பணம் எடுத்துவிட்டு வெளியே வரும்போது முகமூடி அணிந்துவந்த திருடன் ஒருவன் அந்த முதியவரிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சி செய்கிறான். பணத்தை திருட வந்த கொள்ளையனை 77-வயது நிரம்பிய முதியவர், தைரியமாக எதிர்த்துப் போராடி குத்துச்சண்டையிடுகின்றார்.
முதியவரின் தாக்குதலுக்கு பயந்து அந்த திருடன் அங்கிருந்து நகர்கிறான். இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனை அந்நாட்டு காவல் துறையினர் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கொள்ளையனிடம் துணிச்சலாகப் போராடிய முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.