மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே நாளில் 7 பெண்ணுடன் திருமணம்.! அதற்கு இப்படி ஒரு காரணமா.? மணமகன் கூறிய கம்பி கட்டும் கதைகள்.!
உகண்டாவின் மத்திய பகுதியில் வசித்து வரும் ஹபீப் என்சிகோனே என்பவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தற்போது ஒரே நாளில் அவர் 7 பெண்களை இஸ்லாமிய முறைப்படி மிக ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் தனது மனைவிகளை பொறாமை கொள்ளாதவர்கள் என்று பாராட்டி பேசிய ஹபீப் திருமணம் செய்த ஏழு பேரில் இருவர் சகோதரிகள் என்பது கவனிக்கத்தக்கது. பெரிய மற்றும் மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தை உருவாக்க எல்லோரையும் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டதாக அவர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். அவர் பெரும் பணக்காரர் என்பதால் அவரது வீட்டிலேயே தடபுடலாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
ஒவ்வொரு பெண்ணையும் அவரவர் வீட்டு முறைப்படி பாரம்பரியமாக அவர் திருமணம் செய்து கொண்டார். இவரது செயலை கண்ட உறவினர்களும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். இது குறித்து அவர் பேசிய போது 100 குழந்தைகளுக்கு தந்தையாக வேண்டும் என்று அவர் ஆசை கொள்வதாகவும், எனவே தான் 7 பேரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.