#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இடிந்து விழுந்த கார் பார்க்கிங்..!! இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் பலி 5 பேர் காயம்..!!
நியூயார்க் நகரில் கார் பார்க்கிங் பகுதி திடீரென இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரமான நியூயார்க்கில் இயங்கிவரும் பேஸ் பல்கலைக்கழகம் அருகேயுள்ள பகுதி மான்ஹாட்டன். இந்த பகுதியில் அமைந்துள்ள 4 அடுக்கு கட்டிடத்தில், கார்களை நிறுத்துவதற்காக பார்க்கிங் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
பார்க்கிங் தளம் அமைந்துள்ள கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழ் தளத்தின் மீது விழுந்ததில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் ஒன்றன் மீது ஒன்றாக விழுந்துள்ளன. இந்த விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதாகவும், ஐந்து பேர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அங்கு மீட்பு பணிகளில் தீயணைப்பு துறையினர் மற்றும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சிக்கிய அனைவரும் தொழிலாளர்கள் என்றும் கட்டிடம் தொடர்ந்து சரிந்து வருவதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.