மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாடல் அழகியுடன் டேட்டிங் செய்யணுமா?.. உங்களுக்கான வாய்ப்பு இதோ.. அதிரவைத்த விளம்பரம்.!
பிரிட்டிஷ் நாட்டில் உள்ள செய்தித்தாள் நிறுவனத்தில், ஒரு பிரபல நாளிதழ் உள்ளது. இந்த நாளிதழில் அதிகளவு கவர்ச்சி, கட்டுரைகள் மற்றும் அதுதொடர்பான செய்திகள் வெளியாகும். பிறர் மனதை புண்படுத்தாத வகையில், அந்தந்த மாடல்களின் விளம்பரத்தை, அவர்களின் விருப்பத்துடன் இந்த செய்தித்தாள் நிறுவனம் பதித்து வெளியிட்டு வருகிறது.
இன்றுள்ள காலத்தில் டேட்டிங் செயலிகள் என்பது நம்மிடையே அறிமுகமான ஒன்றாக உள்ள நிலையில், இந்தியாவை பொறுத்தளவில் அதனால் ஏற்பட்ட மோசடிகள் தான் அதிகம். ஏனெனில் டேட்டிங் என்ற விஷயத்தையும் பணமாக மாற்ற துடித்து மோசடி கும்பல், இவ்வழியிலும் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், மாடல் அழகியுடன் நீங்கள் டேட்டிங் செய்ய விருப்பமா?. உடனடியாக உங்களின் இடம், இருப்பிடம், சமூகவலைத்தள பக்கம் தொடர்பான தகவலை கீழுள்ள மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் என்று புதிய யுக்தியை செய்தித்தாள் நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது. இதனால் அவர்களின் நாளிதழ் வழக்கத்தைவிட அதிகளவில் விற்பனையாகும் என்றும் நம்புகிறார்கள்.
காலத்திற்கு ஏற்றாற்போல இந்நாளிதழ் இணையவழி சேவையையும் தனது வாசகர்களுக்கு அளித்து வரும் நிலையில், அவை அனைத்தும் பணம் கட்டினால் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொறுத்த வரையில் இதுபோன்ற அறிவிப்புகள் மற்றும் அது தொடர்பான விளம்பரங்கள் சட்டத்திற்கு புறம்பானது என்பதால், தேவையற்ற முயற்சியை இந்திய இளைஞர்கள் எடுப்பது வீண் பிரச்சனைக்கு வழிவகை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.