3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
பகீர் தகவல்... துருக்கியை தொடர்ந்து இந்தியாவிற்கு எச்சரிக்கை.... நிலநடுக்கம் குறித்து எச்சரித்த புவியியல் ஆய்வாளர்...!
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பேரிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் மூன்று நாட்களுக்கு முன்பே இந்த நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்து சொல்லி இருந்தார்.
இந்நிலையில் இதே போன்ற சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் ஏற்பட வாய்ப்புள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நெதர்லாந்தை சேர்ந்த ஃப்ரான்க் ஹூகர்பீட்ஸ் என்னும் புவியியல் ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி பிற்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என துல்லியமாக தணித்துள்ளார்.
SSGEOS என்ற புவியியல் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் இவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவு தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த பதிவில் கூடிய விரைவிலோ அல்லது தாமதமாகவோ, மத்திய தெற்கு துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் பகுதியில் 7.5 என்ற லிட்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகும் என்று கூறியிருந்தார். அப்போது யாரும் அதை கருத்தில் கொள்ளாத நிலையில், நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் ஃப்ரான்க் மீண்டும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் மத்திய துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களும் என் மனதில் உள்ளனர். 115 மற்றும் 526 ஆவது ஆண்டுகள் போல் இந்த பகுதியில் இது போன்ற நிலநடுக்கம் ஏற்படும் என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன் என்று பதிவிட்டிருந்தார்.
தற்போது ஃபிராங்க் புவியியல் சூழல் குறித்து வெளியிடும் கருத்துக்கள் உற்று நோக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் தகவல் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்யும் விதமாக உள்ளது.
ஒரு பெரும் அளவிலான நிலநடுக்கம் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு, பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக வந்து இந்திய பெருங்கடலில் முடிவடையும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் இந்த நிலநடுக்கம் எப்போது ஏற்படும் என்று குறிப்பிடவில்லை.