மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து.. 40 பயணிகள் துள்ளத்துடிக்க உயிரிழந்த பரிதாபம்.!
அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி பயணம் செய்த பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்ததால் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில், லாஸ்பேளா மாவட்டத்தில் அதிக பயணிகளை ஏற்றுக்கொண்ட பேருந்து குவெட்டா நகரில் இருந்து கராச்சி நோக்கி பயணம் செய்துகொண்ட இருந்தது.
இந்த பேருந்து அப்பகுதியில் ஓடும் ஆற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் மீது சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை பேருந்து இழந்துள்ளது.
இதனால் ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீ பிடித்து எரிந்து நாசமானது. பேருந்துக்குள் சிக்கிய பயணிகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு பலியான 40 பேரின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.