மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல்.. 10 வீரர்களை கொன்று குவித்த பயங்கரவாதிகள்.!
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் வசித்த வரும் மக்கள், பல வருடமாக தனிநாடு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள், ஆயுதமேந்தி அந்நாட்டு இராணுவத்திற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானின் வடக்கு எல்லைப்பகுதியில் உள்ள தெஹ்ரிக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்புகளும் அரசுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கேச் மாவட்டத்தில், இராணுவ வீரர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது, அங்கு வந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தவே, சம்பவ இடத்திலேயே 10 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர். பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட பதில் நடவடிக்கையில் 1 பயங்கரவாதியும் கொல்லப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்புகள் ஏதும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை.