மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரயில் பயணிகளை குளிக்கவைத்த இளைஞர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த பயணிகள்.. நையப்புடைத்து பைக்கை தூக்கி சென்றதால் பரபரப்பு.!
இணையதள உலகில் ட்ரெண்டிங் என்ற வார்த்தை மட்டும் சர்வதேச அளவில் பல நாடுகளில் பிரபலமான ஒன்றாக இருக்கிறது. யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நபர்கள், அதில் தங்களின் விடியோவை பார்வையாளர்கள் அதிகம் பார்க்க வேண்டும் என புதுவிதமான யோசனைகளை செய்து மகிழ்கின்றனர்.
இவ்வாறான யோசனைகள் இணையத்தளத்தில் வரவேற்பை பெற்றாலும், ஒருசிலநேரம் அதற்கான முயற்சியை எடுக்கும் நபர்களுக்கு துன்பத்தை தந்துவிடும். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சிறார்கள் & இளைஞர்கள் குழு தங்களின் மகிழ்ச்சிக்காக செய்த சம்பவம் ஏதிவினையாற்றியது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஒரு வாரத்தில் 400 பப் சிகிரெட் பிடித்ததால் சோகம்; 17 வயது சிறுமிக்கு நேர்ந்த பெருங்கொடுமை.!
இரயிலுக்குள் நீரை பாய்ச்சிய இளைஞர் கூட்டம்
பாகிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்டதாக தெரியவரும் வீடியோவில், இளைஞர்கள் இரயில் தண்டவாளத்திக்கு அருகேயுள்ள கால்வாயில் இருக்கும் நீரில் வாகனத்தை சுத்தப்படுத்திக்கொண்டு இருக்கின்றனர். அச்சமயம் இரயில் ஒன்று வந்துவிட, அவர்கள் வாகனத்தை திரும்பி நிறுத்தி, இரயிலை சுத்தம் செய்யும் முயற்சியில் இறங்குகின்றனர்.
பயணிகள் இரயில் என்பதால், அதில் பயணிகளும் இருக்க, ஜன்னலோரம் இருந்த பல பயணிகளின் நிலைமை நீரால் நனைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அபாயசங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். இதனால் இரயில் அங்கேயே நிற்க, விரட்டி வந்தவர்கள் இளைஞர்களை கடுமையாக கண்டித்தனர்.
பைக்கை தூக்கிய பயணிகள்
மேலும், அவர்கள் இச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனகத்தை இரயிலுக்குள் ஏற்றுக்கொண்டவர்கள், தங்களின் பயணத்தை தொடர்ந்தனர். இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் குழு, இரயில் புறப்பட்டு நகரும்போது கல்வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
Kalesh b/w Train Passengers and Some guys who were sprinkling water on Train (These people thought that the train would not stop, the train stopped, the passengers beat them up and also seized there bike) Pakistan
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 26, 2024
pic.twitter.com/DIKZNqeRrx
இதையும் படிங்க: இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது - கனடா பகிரங்க குற்றசாட்டு.. கேள்விக்குறியாகும் இந்தியா - கனடா உறவுகள்.!