#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியா எப்பவுமே கெத்துதான்..மைதானத்தில் கம்பீரமான குரலில் கேட்ட இந்திய தேசிய கீதம், பாடியது யார் தெரியுமா?
ஆசிய கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது இந்திய தேசிய கீதத்தை பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது .
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபியில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 19ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகள் நடைபெற்றது.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு முன் இருநாட்டு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டது. அப்பொழுது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் கம்பீரமாக தனது உரத்த குரலில் இந்திய தேசிய கீதத்தை பாடினார்.
இதனை அருகில் இருந்த சக ரசிகர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வியந்தனர் .
இந்நிலையில் அவர் இந்திய தேசிய கீதம் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது .
Dear @narendramodi and @ImranKhanPTI ... this is a Pakistani man singing the Indian national anthem. This video has gone viral. If you are wondering what people of both nations really want, this is a good indicator. pic.twitter.com/xGZTXgNqUu
— VOICE OF RAM (@VORdotcom) 21 September 2018
இதுகுறித்து அந்த இளைஞரிடம் கேட்கப்பட்டபோது தன்னுடைய பெயர் அடில் தாஜ் என்றும் தனது வீடியோவை வெளியிட்டதற்கு நன்றி எனவும் தெரிவித்தார்.
மேலும் அவர் எங்கும் அமைதியையும்,அன்பையும் பரப்ப வேண்டும் என்றும் போர் என்பது முட்டாள்தனமானது என்றும் கூறினார். இது இந்திய ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியது.