இந்தியா வந்த பாக். பெண்ணால் இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி; பாகிஸ்தானில் தாக்கப்படும் இந்துக்கள்.! பயத்தின் உச்சக்கட்டத்தில் பரிதவிப்பு.!



Pakistan Hindu Peoples Attacked by Goons due to Seema Haider issue 

 

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண்மணி, உத்திரபிரதேசம் மாநிலம் நொய்டாவை சேர்ந்த இளைஞர் சச்சின் இடையே பப்ஜி கேமில் விளையாடும்போது காதல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த காதலை தொடர்ந்து சீமா தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியே இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து காதலரை கரம்பிடித்தார். 

இவர்கள் நொய்டாவில் வாழ்ந்து வந்த நிலையில், சீமா குறித்த தகவலை அறிந்த உளவுத்துறை அதிகாரிகள் நொய்டா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சீமா, சச்சின், சச்சினின் தந்தை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். காதல் ஜோடி தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு இருவரும் சொந்த ஜாமினில் வெளியே வந்தனர். 

சீமாவின் பாகிஸ்தான் கணவர் மனைவி சீமாவை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இவை தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி, சீமா பாகிஸ்தானிய உளவு பெண் என ஒருபுறம் போர்க்கொடி தூக்கப்பட்டது. மேலும், அவரை பாகிஸ்தான் நாட்டிற்கு கொண்டு சென்று விட்டுவிடவும் கோரிக்கை வைக்கப்பட்டது. 

Pakistan

மறுபுறம் சீமா ஹைதர் மற்றும் சச்சின் பல செய்தி நிறுவனங்களுக்கு தொடர் பேட்டி அளித்து வந்த நிலையில், "நான் இந்தியரை திருமணம் செய்துள்ளேன், அதனால் நான் இந்து" என சீமா பதில் கூறி பாகிஸ்தானியர்களுக்கு அதிர்ச்சியை தந்தார். இவரின் பேச்சுக்கள் பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் இந்துக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. 

அங்குள்ள இந்து கோவில்கள் அடுத்தடுத்து இடித்து அகற்றப்படும் நிலையில், அங்குள்ள இந்து மதத்தினரை இந்தியாவுக்கு கிளம்பி செல்ல வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அங்கு இந்துக்களின் மீது தாக்குதலும் அதிகரித்து இருக்கின்றன. இதனால் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பல பாகிஸ்தானிய பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பாக். ஆர்வலர்கள், சீமா ஹைதரை இந்தியா பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். மீறினால் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களை காப்பாற்றக்கூறி அங்குள்ள இந்து தலைவர்கள் கோரிக்கை வைப்பதாகவும் கூறப்படுகிறது.