மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: பாகிஸ்தானில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு.. 30 பேர் உடல்சிதறி பலி., 50 பேர் படுகாயம்.!
மசூதியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.
பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கு பகுதியில் பெஷாவர் நகர் உள்ளது. இந்த நகரில் உள்ள மசூதியில் இன்று பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் மசூதியில் தொழுகையில் ஈடுபட்ட 30 பேர் பரிதாபமாக உடல் சிதறி பலியாகினர்.
மேலும், 50 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உயிருக்கு அலறி துடிக்கவே, சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சம்பவ இடத்தில் பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ள நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் தற்போது வரை பொறுப்பேற்கவில்லை. இது தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பின் சதிச்செயலாக இருக்கலாம் எனவும் உள்ளூர் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன.