நாங்கள் அமைதியை விரும்புகிறோம் : பாக். பிரதமர் ஐ.நா சபையில் பேச்சு.!



pakistan-prime-minister-speech-at-america-united-nation

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்த ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் உரையாற்றுகையில், "இந்தியா உள்ளிட்ட அனைத்து நாட்டுடனும் பாகிஸ்தான் அமைதியை மட்டுமே விரும்புகிறது. இரண்டு நாட்டிலும் ஆயுதங்கள் உள்ளது என்றாலும், போர் விருப்பம் இல்லை. 

அமைதி பேச்சுவார்த்தை மூலமாக தேர்வு காண இயலும். கடந்த 1947 முதல் 3 போர்களை நாம் சந்தித்துள்ளோம். இதனால் இருதரப்பிலும் துன்பம், வறுமை, பிரச்சனை, வேலையின்மை அதிகரித்து இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் அமைதிக்கான உறுதிப்பாட்டில் நிலையாக இருக்கிறோம். இதனை உலக மண்டலத்திற்கு நான் உறுதியாக கூறுகிறேன்.

இந்தியா ஆக்கபூர்வமான சூழலை உருவாக்கி, நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜம்முவில் இராணுவ நிலைகளை இந்தியா அதிகரித்து இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் உலகிலேயே இராணுவ மயமாக்கப்பட்ட மண்டலமாக மாறியுள்ளது" என்று பேசினார்.