மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் கடத்தல் முயற்சி தோல்வியால் சுட்டு கொலை.. பாகிஸ்தானில் வெறிச்செயல்.!
தெருவில் நடந்து சென்ற இந்து சிறுமியை கும்பலொன்று கடத்த முயற்சிக்க, பெண் எதிர்ப்பு தெரிவித்து போராடியதால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் இந்துக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். ஆனால், பாகிஸ்தானில் முஸ்லீம்களின் கைகள் ஓங்கி இருப்பதால், அங்குள்ள இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இதனால் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள், இது சிறுமிகளை குறிவைத்து கடத்தி, கட்டாய மதமாற்றம் செய்து திருமணம் செய்வது போன்ற கொடூரங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணம், சுக்ரூர் ரோகி கிராமத்தை சேர்ந்த இந்து பெண்மணி பூஜா (வயது 18). இவர் தனது வீட்டருகே உள்ள தெருவில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த கும்பல் பூஜாவை கடத்த முயற்சித்துள்ளது. சுதாரித்த பூஜா தப்பி செல்ல முயற்சித்த நிலையில், ஆத்திரமடைந்த கும்பல் பூஜாவை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.