சோதனை மேல் சோதனை... ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338க்கு விற்பனை.! தத்தளிக்கும் இலங்கை.!



petrol price increased in srilanka

இலங்கை சமீப காலமாக வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை என இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது. நாள்தோறும் பலமணி நேர மின்வெட்டு, மருந்துகள் இல்லாமல் முடங்கிய மருத்துவமனைகள், பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் வினியோக மையங்களில் நாட்கணக்கில் காத்திருக்கும் மக்கள் என இலங்கையின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

இலங்கையில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என இலங்கை முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84 அதிகரித்துள்ளது. அதன்படி இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் டீசல் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.113 அதிகரித்து ரூ.289க்கு விற்பனை செய்யப்படுகிறது.