தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி..! 2024 வரை கொரோனா இருக்கும் - பைசர் நிறுவனம் அறிவிப்பு..!
தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய ஒமிக்ரான் வகை கொரோனா அச்சத்தால் உலக நாடுகள் மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. மிகவும் வேகமாக பரவி வரும் ஒமிக்ரான், 89 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தற்போது வரை பரவியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் ஒமிக்ரான் வகை கொரோனாவால் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 93 ஆயிரம் பேர் அங்கு பாதிக்கப்பட்டனர்.
தடுப்பூசி செலுத்துவதில் மும்மரமாக செயல்பட்டு கொரோனா தொற்றுக்கு விடைகொடுத்திடலாம் என எண்ணியிருந்த நிலையில், ஒமிக்ரான் வகை பெரும் அச்சத்தை ஏற்படுத்திவிட்டது. ஓமிக்ரானுக்கு எதிராக தற்போதைய தடுப்பு மருந்து குறைந்த அளவில் மட்டுமே செயல்படும் என்றும் தெரியவருகிறது. இதனால் மீண்டும் கொரோனா அலை ஏற்படும் அச்சம் பரவியுள்ளது.
இப்படியான நிலையில், ஒமிக்ரான் வகை கொரோனா 2024 ஆம் வருடம் வரை நீடிக்கும் என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. வரும் 2 வருடத்தில் சில பிராந்தியம் வரை கொரோனா நிலை தொடரும். அதனைத்தொடர்ந்து, 2024 ஆம் வருடம் வரை கொரோனா பெருந்தொற்று உலகளவில் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது,