மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விமானத்தின் அடியில் சிக்கி நசுங்கிய இளைஞர்! கண்ணிமைக்கும் நொடியில் நேர்ந்த விபரீதம்! வைரலாகும் பகீர் வீடியோ!
தாய்லாந்தில் நாக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 189 பயணிகளுடன் பாங்காங்கின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. அப்பொழுது thanisorn oncha என்ற இன்ஜினியர் ஒருவர், மற்றொரு நபருடன் டிரக்கில்
அப்பகுதியில் சென்றுகொண்டு இருந்துள்ளார்.
அப்பொழுது விமானம் திடீரென்று கட்டுப்பாட்டை மீறி வேறு திசையில் ஓடிய நிலையில் நின்றுகொண்டிருந்த டிரக் மீது மோதியது. இதில் விமானத்தின் அடியில் டிரக் சிக்கி அதில் இருந்த இன்ஜினியர் நசுங்கி எழ முடியாத நிலையில் கிடந்துள்ளார். மற்றொரு நபர் குதிப்பதற்கு முயற்சி செய்துள்ளார்.
பின்னர் நசுங்கிய நிலையில் மீட்கப்பட்ட அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவருடன் டிரக்கில் இருந்த மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனைத்தொடர்ந்து மற்றொரு புதிய விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விமான நிறுவனம் அளித்த அறிக்கையில் ஊழியர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும். ஆனாலும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கான பண உதவிகளை விமான நிறுவனம் சார்பாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.