மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அம்மா.. பசிக்கிதும்மா... 8 பிள்ளைகளின் பசியை போக்க கற்களை போட்டு சமைத்த ஏழை தாய்..! கண்கலங்க வைக்கும் சம்பவம்.!
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அன்றாட சம்பளத்தை நம்பி இருந்த பலரும் ஒருவேளை சாப்பாட்டிற்க்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், பசியில் இருந்த தன் பிள்ளைகளின் பசியை போக்குவதற்காக தாய் ஒருவர் தண்ணீரில் கற்களை போட்டு சமைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டின் மொம்பாசா நகரில் வசித்து வருபவர் பெனின்னா பஹாட்டி கிட்டாசோ. இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்ட நிலையில் சலவை தொழில் செய்து தனது 8 பிள்ளைகளை காப்பாற்றிவருகிறார் பெனின்னா.
தற்போது அங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பெனின்னா வேலைக்கு போகவில்லை. இதனால் வருமானம் இல்லை. இந்நிலையில் தன்னிடம் இருந்த பொருட்களை வைத்து தினமும் ஒருநேரம் தனது குழந்தைகளின் பசியை போக்கி வந்துள்ளார் பெனின்னா. தற்போது கைவசம் இருந்த பொருட்களும் முடிந்துவிட்டதால் ஒருவேளை சாப்பாட்டிற்கே சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் அம்மா... பசிக்கிதும்மா... என பசிக்கொடுமையோடு தாயிடம் கேட்க, என்ன செய்வது என்று தெரியாமல் பெனின்னா அங்கு கிடந்த சில கற்களை எடுத்து தண்ணீரில் போட்டு சமைப்பதுபோல் நடித்துள்ளார். அம்மா நமக்காக சாப்பாடு தயார் செய்கிறார் என பசியோடு காத்திருக்கும் குழந்தைகள் காத்திருந்து காத்திருந்து பசி மயக்கத்தில் தூங்கி விடுகின்றனர்.
இப்படியே சமாளித்துக்கொண்டிருந்த பெனின்னாவின் நிலைமையை பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட, அதை படித்த ஒவ்வொருத்தர் கண்களும் கலங்கிப்போனது. இதனை அடுத்து பெனின்னாவின் ஏழ்மையை புரிந்துகொண்ட சிலர் உலகின் பல பகுதிகளில் இருந்து தங்களால் இயன்ற உதவியை அளித்துள்ளனர்.
குழந்தைகளின் பசியை போக்க கற்களை போட்டு சமைத்த ஏழை தாயின் இந்த நிலை இனி எந்த தாய்க்கும் வரக்கூடாது என வேண்டிக்கொள்வோம்.