வீடுகளைத் தேடிக் கண்டுபிடிக்க சிரமப்பட்டு, 24ஆயிரம் கடிதங்களை வீட்டிலேயே பதுக்கிய தபால்காரர்!



post man arrest for cheat


ஒரு ஜப்பானிய தபால்காரர் சுமார் 24,000 கடிதங்களை ஒரு மலை போல் குவித்து 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டின் டோக்யோ பகுதியில் ஓய்வுபெற்ற தபால்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான நபர் 2003ம் ஆண்டு முதல் பல கடிதங்களை தன் வீட்டில் பதுக்கி வைத்துள்ளார். சுமார் 24ஆயிரம் கடிதங்களை தன் வீட்டில் மலைபோல் குவித்து வைத்துள்ளார்.

பல கடிதங்களை காணவில்லை என ஜப்பான் தபால்துறை நடத்திய விசாரணையில் ஓய்வுபெற்ற தபால்காரர் சிக்கியுள்ளார். வீடுகளைத் தேடிக் கண்டுபிடித்து கொடுக்க சிரமமாக இருந்ததால் 24ஆயிரம் கடிதங்களை தன் வீட்டிலேயே வைத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். 

arrest

கடிதங்களை என்னால் கொடுக்கமுடியவில்லை என்று தெரிந்தால் நான் திறனற்றவன் என பணிபுரிபவர்கள் எண்ணுவார்கள் என நினைத்து அவ்வாறு செய்தேன் என  போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் தபால்காரருக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் கைப்பற்றப்பட்ட கடிதங்கள் மன்னிப்பு கோரப்பட்டு உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.