#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தந்தையின் மறதியால், தவித்து இறந்த 10 மாத பிஞ்சு.. காருக்குள் மூச்சுதிணறி கொடூரமாக நிகழ்ந்த மரணம்.!
போர்ச்சுகல் நாட்டில் ஒரு விரிவுரையாளரான தந்தை கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தனது குழந்தையுடன் காரில் சென்றார். நர்சரி பள்ளியில் குழந்தையை இறக்கி விட மறந்த அவர் நேரடியாக தனது யுனிவர்சிட்டிக்கு சென்று காரை நிறுத்திவிட்டு மாணவர்களுக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தார். 7 மணி நேரம் கழித்து மீண்டும் தனது காருக்கு வந்து அவர் கதவை திறந்து பார்த்தபோது காருக்குள் 10 மாத மகள் மயக்க நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக அவசர சேவைக்கு அவர் தகவல் தெரிவிக்க விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு அவள் இறந்து கிடப்பதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாய் ஓடி வந்து குழந்தை இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் அவரும் கீழே விழுந்து அழ தொடங்கினா.ர் பின்னர் அவருக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டது. இருக்கையில் குழந்தை உறங்கி விட்ட நிலையில் அந்த குழந்தையை மறந்து விட்டதாக போலீஸிடம் தந்தை தெரிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்ததால் குழந்தை உயிரிழந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது பற்றி தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அன்றாடம் வேலைக்கு செல்வதற்கு முன் குழந்தையை நர்சரியில் தந்தை இறக்கி விட்டு விட்டு செல்வாராம். ஆனால் சம்பவ தினத்தில் அதை தந்தை மறந்துவிட்டு இருக்கின்றார். அதுவே குழந்தையின் இறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.