மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீனாவை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவு..100க்கும் மேற்பட்டோர் பலி.!
சீனாவில் கான்ஷு மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோல் 6.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் சாலைகளும், தொலைத்தொடர்பு இணைப்புகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை வழங்கும்படி சீனா அதிபர் ஷி ஜின்பிங்க் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் இதுவரை நூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 400க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.