மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கொடுமையே! தேனீக்களை மொய்க்கவிட்டு, கர்ப்பிணி பெண் நடத்திய போட்டோஷூட். ! பார்ப்போரை மிரள வைத்த புகைப்படம்!
கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் விலைமதிப்பில்லாத தருணமாகும். இந்த நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் பெண்கள் பொக்கிஷமாக கருதுவர். மேலும் சமீபகாலமாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மிகவும் வித்தியாசமாகவும், விதவிதமாகவும் புகைப்படங்களை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு அமெரிக்காவைச் சேர்ந்த 37 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் தேனீக்களை கொண்டு மிகவும் வித்தியாசமாக கர்ப்பகால போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த அந்த கர்ப்பிணிபெண் தேனீக்களை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
The queen is tethered to my belly inside of a cage. Poetry. pic.twitter.com/KyAJQLEza5
— Emily Murnane (@emily_murnane) July 3, 2020
அப்பொழுது அவர் தனது கர்ப்பமான வயிற்றில் பத்தாயிரக்கணக்கான தேனீக்களை மொய்க்கவிட்டு, அதனை புகைப்படமாக எடுத்துள்ளார். மேலும் அதனைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த அவர், இதனை கண்டு யாரும் கவலைப்பட வேண்டாம். மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே இந்த புகைப்படத்தை எடுத்துள்ளோம். மேலும் இது மிகவும் ஆபத்தானது. இதுகுறித்த அனுபவமும் அறிவும் இல்லாமல் இதனை யாரும் முயற்சி செய்ய வேண்டாம் என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போரை மிரள வைத்துள்ளது.