திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
துருக்கியை நினைத்து கவலைப்படும் ரெனால்டோ; பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்டுவதில் தீவிரம்...!
துருக்கியில் நிகழ்ந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட தொடர் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9500 எட்டியுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் உலக நாடுகளில் இருந்து உதவிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு கால்பந்து உலகமும் தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறது.
துருக்கி நிலநடுக்கத்தால் பெரியளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடைய கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்திற்கு வழங்கியுள்ளார். இதை துருக்கி கால்பந்து வீரர் அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
துருக்கி கால்பந்து வீரர் மெரிஹ் டெமிரல் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- ரொனால்டோவுடன் பேசினேன், துருக்கியில் நடந்த சம்பவங்கள் மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் கையெழுத்திட்ட ஜெர்சியை ஏலத்தில் வழங்குவதாக கூறினார். அதன் மூலம் கிடைக்கும் பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.