திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
துருக்கியில் கோர விபத்து ..! மனதை பதைபதைக்க வைக்கும் கடைசி நிமிடங்கள்...
துருக்கியில் அக்னி மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. துருக்கியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் மீது அதிவேகமாக வந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்து நிகழ்ந்த சில நிமிடங்களில் பேருந்து முழுவதும் மல மலவென தீ பரவியது. தீ பரவியதால் பேருந்தில் இருந்த பயணிகள் பெரும் கூச்சலிட்டு பேருந்தின் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு கீழே குதித்தனர். மேலும் கீழே குதிக்க முடியாமல் சிக்கிக்கொண்ட பயணிகள் ஏழு பேர் உடல் கருகி பலியாகினர்.
மேலும் 11 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது