மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நல்லா வேலை செய்யுது..! பக்கவிளைவுகள் இல்லை..! கொரோனா தடுப்பூசி..! நம்பிக்கை தரும் நாடு..!
எந்த ஒரு பக்கவிளைவுகளும் இல்லாத கொரோனா தடுப்பூசியை தயாரித்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் உலகம் முழுவதும் சுமார் 21 தடுப்பூசிகள் மீதான சோதனை முக்கிய கட்டத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மனிதர்கள் மீதான தடுப்பூசி சோதனையில் தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதாக ரஷ்யா சமீபத்தில் தெரிவித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, தாங்கள் மிகவும் பாதுகாப்பான, பக்க விளைவுகள் ஏதும் இல்லாத ஒரு தடுப்பூசியை தயாரித்திருப்பதாக ரஷ்யா கூறியுள்ளது.
18 பேருக்கு செலுத்தி சோதனை செய்யப்பட்டதில் எந்த ஒரு பக்க விளைவுகள், மருத்துவ புகார்கள், சிக்கல்கள் ஏதும் வரவில்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆனாலும் தடுப்பூசி சோதனையில் மூன்று முக்கியமான கட்டங்கள் இருப்பதாகவும் முதல் கட்டத்தில் வெற்றிபெற்றுவிட்டோம், இன்னும் இரண்டு கட்ட சோதனைகள் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
அடுத்த 2 கட்ட சோதனைகளும் ஜூலை மாத இறுதிக்குள் முடிந்துவிடும் எனவும், விரைவில் கொரோனா தடுப்பூசி சந்தைக்கு வரும் எனவும் ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது.