கொரோனா ஆண்கள் வார்டில் உள்ளாடையுடன் பணியாற்றிய இளம் நர்ஸ்! இறுதியில் அடித்த அதிர்ஷ்டம்!



russian-nurse-got-model-chance-for-wearing-inly-inners

ரஷ்யாவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவி இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3000த்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் துலா என்ற நகரத்தில் மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. 

அங்கு ஆண்கள் கொரோனா வார்டில் இளம்செவிலியர் ஒருவர் உள்ளாடை மட்டும் அணிந்து, அதன்மேல் பி.பி.இ எனப்படும் பாதுகாப்பு கவசத்தை அணிந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ரஷ்யாவில் கோடை வெயில் அதிகரித்த நிலையில், அதனை தாங்கிக் கொள்ள இயலாமலே இதுபோன்று உடை அணிந்ததாகவும் கூறப்பட்டது.

nurse

ஆனாலும்  விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி அவருக்கு  கண்டனங்கள் எழுந்தன. ஆனால் அதே நேரத்தில் அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தனர். இந்நிலையில் உள்ளாடை தெரியும்படி பாதுகாப்பு உடை அணிந்து சிகிச்சை அளித்த செவிலியர் நாடியாவின்  புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது 

இந்நிலையில் இதனை கண்ட பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுவனத்தின் தலைவர் அனஸ்தேசியா யகுஷேவா, நாடியா அவர்கள் எங்கள் நிறுவன மாடலாக வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். மேலும் அவருக்காக பல புதிய தயாரிப்புகளையும் உருவாக்க உள்ளோம். இதுதொடர்பான ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.