சிவப்பு நிற ஆடை அணிந்த பெண்களை தேடித்தேடி பலாத்காரம் செய்து கொலை செய்த சைக்கோ!



serial killer in china condemned to death

சீனாவில் 11 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொடுமையான முறையில் கொலை செய்த சைக்கோ கொலைகாரனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். நீதிபதிகள் கொலைகாரனுக்கு மரணதண்டனை விதித்துள்ளனர்.

சீனாவைச் சேர்ந்த காவோ செங்யாங் என்ற நபர் 1988 ஆம் ஆண்டு 23 வயது இளம்பெண்ணை இவர் முதல் முறையாக பலாத்காரம் செய்து உடலை அறுத்து கொலை செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து கொலைகள் செய்த அவர் இதுவரை 11 பெண்களை கொலைசெய்துள்ளார். அதில் 8 வயது சிறுமியும் அடங்குவார். இந்த நபர் சீன ஊடகங்களால் Jack the Ripper என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

china

இவரால் கொல்லப்பட்ட அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு உடல் பாகங்கள் சிதைக்கப்பட்ட நிலையிலும், அந்தரங்க உறுப்புகள் வெட்டப்பட்ட நிலையிலும் புதைக்கப்பட்டுள்ளனர். இவர் குறிப்பாக சிவப்பு ஆடை அணிந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு, அவர்களின் குடியிருப்புகளுக்கு சென்று பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

5 ஆண்டுகள் நடைபெற்ற தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டைக்கு பின்னரே சீன போலீசார் காவோவை கைது செய்தனர். அவர் மீது நடத்தப்பட்ட வழக்குவிசாரணை முடிவிற்கு வந்தநிலையில் காவோவிற்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.