மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமெரிக்காவில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை... ஆண் செவிலியருக்கு கொடுக்கப்பட்ட தரமான தண்டனை..!
அமெரிக்காவில் ஆண் செவிலியர் ஒருவரால் 16 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பெரும்பாளானோர் வேலைக்கு அல்லது வெளியூருக்கு செல்லும்போது தனியாக இருக்கும் தங்களது குழந்தைகளை பராமரித்துக்கொள்ள செவிலியர்களை நியமிப்பது வழக்கம்.
அந்த வகையில் கலிபோர்னியா மாநில தம்பதி ஒருவர் தங்களது குழந்தையை பராமரித்து கொள்ள செவிலியர்களுக்கான இணையதளம் மூலம் மேத்யூ ஜாக் ஜெவ்ஸ்கி என்பவரை நியமித்துள்ளனர். அப்போது சிறுவனிடம் மேத்யூ ஜாக் ஜெவ்ஸ்கி தவறாக நடக்க முயற்சித்ததாக பெற்றோர் புகார் அளித்தனர்.
இதனையடுத்து போலீசார் செவிலியர் ஜாக் ஜெவ்ஸ்கியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர் 5 ஆண்டுகளில் 16 சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம் மேத்யூ ஜாக் ஜெவ்ஸிக்கு 690 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது.