கொரோனாவை கட்டுப்படுத்த இதை தான் செய்ய வேண்டுமா.! குட்டி வீடியோவில் பெரிய கருத்து



short-video-to-get-rid-of-corono-virus

உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸை எப்படி கட்டுப்படுத்துவது என்று உலக நாடுகள் அனைத்தும் விழிபிதுங்கி நிற்கின்றன. தற்போது தான் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இனிமேல் தான் அதனை பரிசோதனை செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அப்படி ஒரு மருந்து வெளியாகும் வரை கொரோனா வைரஸ் பரவுவதை மட்டுமே தடுக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்த பலரும் பல விதமான வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றனர்.

எல்லவற்றிற்கும் மேலாக கோரோனா வைரஸ் பாதித்தவர்களையும் மற்றவர்களையும் தனித்தனியாக பிரிப்பதே சிறந்த வழி என்று பலரும் அறிவுறுத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் தான் பல நாடுகள் புதிய புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளன.

Corono virus

இந்த அணுகுமுறையை எளிய வழியில் புரியும்படி ஜுவான் டெல்கன் என்பவர் வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த வீடியோவில் தீக்குச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கப்பட்டு ஒரு புறத்திலிருந்து நெருப்பு பற்ற வைக்கப்படுகிறது. வேகமாக தீ பரவிவரும் நிலையில் இடையில் இருக்கும் ஒரு தீக்குச்சி மட்டும் விலகிகொள்கிறது.  இதனால் தீ தொடர்ந்து பரவாமல் தடுக்கப்படுகிறது.

இதேபோல தான் ஒவ்வொரு மனிதராக தாவி வரும் கொரோனா வைரஸை தடுக்க மனிதர்களாகிய நமக்குள் ஒருவித இடைவெளியை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்து மக்கள் வெளியில் உலாவுவதை குறைக்கும்பட்சத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என அந்த நபர் உணர்த்துகிறார்.