#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் உடலிலிருந்து உயிருடன் வெளியே வந்த பாம்பு.! அலறியடித்து ஓடிய பெண்.! திகில் சம்பவம்!!
பிரேத பரிசோதனையின்போது இறந்த மனித உடலிலிருந்து, பாம்பு ஒன்று உயிருடன் வந்ததை கண்டு பிரேத பரிசோதனை ஊழியர் அலறியடித்து ஓடியுள்ளார்.
அமெரிக்கா மேரிலாண்ட் பகுதியில் பிரேத பரிசோதனை செய்யும் ஊழியராக ஜெசிகா லோகன் என்ற 31 வயது பெண் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் மருத்துவராக ஆசைப்பட்டுள்ளார். ஆனால் வீட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் அவர் பிரேத பரிசோதனை ஊழியராக பணிபுரிந்தார். இந்நிலையில் அவர் பிரேத பரிசோதனையின் போது தனக்கு நேர்ந்த திகிலான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், இறந்த நபர் ஒருவரது உடலை பிரேத பரிசோதனை செய்து கொண்டிருந்த போது, அவரது உடலில் அதுவும் தொடைப்பகுதியில் இருந்து பாம்பு ஒன்று உயிரோடு வெளியே வந்துள்ளது. இதனைக் கண்டதும் ஜெசிகா அங்கிருந்து பதறியடித்து வெளியே ஓடியுள்ளார். மேலும் பாம்பை பிடித்த பிறகுதான் வெளியே வருவேன் என்றும் கூறியுள்ளார். பின்னர் பாம்பை பிடித்தபிறகே அவர் தனது வேலையை பார்த்துள்ளார்.
அந்த இறந்த உடல், ஓடை ஒன்றின் அருகிலிருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அப்பொழுது அவரது உடலுக்குள் பாம்பு புகுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெசிகா கூறுகையில், இறந்தவர்களின் உடல்கள் எங்கு எப்படி கண்டெடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். குளிரான, உலர்ந்த இடங்களில் இறந்த உடல்கள் இருந்தால், பூச்சிகள், ஆபத்தான உயிரினங்கள் சடலத்தை அணுகாது. ஆனால், சூடான, ஈரப்பதமான இடங்களில் பூச்சிகள், ஆபத்தை ஏற்படுத்தகூடிய உயிரிகள் உடலில் அதிகம் இருக்கும் என கூறியுள்ளார்.