திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அதிர்ச்சி! இந்த பாம்பு செய்யும் காரியத்தை பாருங்கள்! வைரலாகும் வீடியோ.
உலகில் ஏதாவது ஒரு இடத்தில் தினம்தோறும் வித்தியாசமான ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டேதான் இருக்கிறது. அந்த வகையில் இன்று ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. வீட்டின் டிவி ஆன்டனாவில் பாம்பு ஓன்று தொங்கியவாறு காகம் ஒன்றை கவ்வி இழுக்கும் காட்சிதான் அது.
ஆஸ்திரேலிய நாட்டில் கிங்ஸ் கிளிப் பகுதியை சேர்ந்த கேத்தி கல் என்பவர், தனது வீட்டின் மொட்டை மாடியில் இந்த காட்சியை கண்டதும், அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த கேத்தி, இதற்கு முன்னர் பாம்பு பறவையை சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. இந்த சம்பவத்தை கண்டதும் வீடியோவாக எடுத்து வெளியிட்டதாக தெரிவித்துள்ளார்.