திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பள்ளிக்குழந்தைகள் பயணித்த வேன் - அதிவேக லாரி பதறவைக்கும் விபத்து.. 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உடல் நசுங்கி பலி..!
குழந்தைகளை ஏற்றிச்சென்ற வேனின் மீது லாரி மோதிய விபத்தில், வேனில் பயணித்த குழந்தைகள் உட்பட அனைவரும் பலியான சோகம் நடந்துள்ளது.
தென்னாபிரிக்க நாட்டில் உள்ள குவாசுலு - நடால் மாகாணத்தில் ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ - மாணவிகள், நேற்று பள்ளியை முடித்துவிட்டு மினி வேனில் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டு இருந்தனர்.
வேனில் மொத்தமாக 19 குழந்தைகள், ஓட்டுநர், உதவியாளர் என 21 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த வேன் தேசிய நெடுஞ்சாலைக்கு சென்றபோது, எதிர்திசையில் வந்த கனரக லாரி பள்ளி வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இந்த அதிபயங்கர விபத்தில் வேனில் பயணம் செய்த 21 பேரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்த சி.சி.டி.வி கேமிரா காட்சிகள் இணையத்தில் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
This is how families in Pongola lost their children because of a moron on the N2 😭 19 kids ffs😭😭pic.twitter.com/v4uo7keJRJ
— Shonny 🦇 (@Shonny_SA) September 16, 2022