திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கோர விபத்து..! தொழிலாளர்கள் பேருந்து 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, 11 பேர் உடல் சிதறி மரணம்..!
சுரங்க தொழிலாளர்களை ஏற்றி சென்ற பேருந்து, 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் மத்திய பகுதியில் கோச்சபாம்பா மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தின் குயில்லாகேல்லோ நகரில் இருந்து, அங்குள்ள காமி என்ற நகருக்கு சுரங்க தொழிலாளர்களை ஏற்றுக்கொண்ட பேருந்து பயணம் செய்துள்ளது.
பேருந்தில் 40 தொழிலாளர்கள் பயணம் செய்த நிலையில், பேருந்து குயில்லாகேல்லோ - காமி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சென்றுள்ளது. அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு இயங்கிய பேருந்து, சாலையோர 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 18 பேர் படுகாயம் அடைந்தனர். மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து படுகாயமடைந்தோரை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.