காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
மருத்துவமனை கட்டிட வேலையில் திடீர் நிலச்சரிவு.. 17 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்து பலி.!!
மருத்துவமனை வளாக கட்டிட பணிகளின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 17 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள குய்சோவ் மாகாணத்தில் உள்ளது பீஜி நகரம். இந்த நகரில் மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் வழக்கம்போல பணியாளர்கள் தங்களின் பணிகளை செய்துகொண்டு இருந்தனர்.
ஏராளமான கட்டுமான பணியாளர்கள் தங்களின் வேலைகளை கவனித்து வந்த நிலையில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. 30 ஆயிரம் சதுர மீட்டர் அளவிலான நிலம், 5 ஆயிரம் சதுர மீட்டர் பாறைகள் விழுந்து நிலச்சரிவு ஏற்பட, இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பரிதமபாக உயிரிழந்தனர்.
இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட, உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் 1000 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பெரிய அளவிலான பாறைகள் சரிந்து கிடந்ததால் மீட்பு குழுவினர் விடியவிடிய மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
நேற்று காலைக்கு பின்னரே 17 தொழிலாளர்களின் உடல் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டது. எஞ்சிய 14 தொழிலாளர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.