மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெளிநாட்டில் அசத்தும் இலங்கை - தமிழ் பெண்.. 3 தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தம் - சந்தியா ஞானமோகன்..!
கனடா நாட்டில் வசித்து வரும் இலங்கை - தமிழ் பெண்மணியான சந்தியா ஞானமோகன் மாடலிங் மற்றும் திரைப்படத்துறையில் பிரபலமாக இருந்து வருகிறார். சந்தியா தனக்கு மூன்று வயதாக இருக்கும் போது இலங்கையிலிருந்து கனடாவிற்கு குடியேறிய நிலையில், தனது 3 வயதில் இருந்து அங்கேயே வசித்து வருகிறார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "நான் படித்தது பி.ஏ பொருளாதாரம். எனக்கு தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் கனடியன் ஆகிய மொழிகளும் தெரியும். கல்லூரியில் படிக்கும் காலங்களில் இருந்தே வேறு ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று நினைத்து வந்தேன். சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இருந்ததால், அதற்காக முதலில் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்தேன்.
எனக்கு 17 வயதில் மாடலிங் துறைக்கு வந்து, தற்போது மாடலிங் நடிகையாகவும், திரைப்பட நடிகையாக இருக்கிறார். முதன்முதலாக போட்டோ எடுத்த போது கூச்சமாக இருந்தாலும், பின்னாளில் அது பழகிக் கொண்டது. ஆடை, அழகு சார்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு மாடலிங் செய்து வருகிறேன்.
நான் நடிக்கப் போகும் விளம்பரம் மக்களுக்கு பயன் உள்ளதா? அல்லது பக்க விளைவுகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து ஆய்வு செய்த பின்னர்தான் அதில் நடிக்கவும் நான் ஒப்புக்கொள்கிறேன். பணத்திற்காக மட்டுமே மாடலிங் செய்ய எனக்கு துளியளவும் விருப்பம் கிடையாது. மாடலாக இருக்க வேண்டுமென்றால் சரும ஆரோக்கியம் என்பது முக்கியமானது.
சரும வறட்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு வைட்டமின் டி கிடைக்க சூரிய குளியல் எடுப்பேன். ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்வேன். தினமும் காய்கறிகள், ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட கனிகளை அதிகம் சாப்பிடுவேன். முடிந்தவரை அனைத்தையும் வீட்டிலேயே உணவாக தயாரித்து சாப்பிடலாம். துரித மற்றும் பிற உணவகத்தில் விற்பனை செய்யப்படும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
தமிழ் மக்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு அதிக ஆர்வம். அதனால் தற்போது மூன்று தமிழ் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.