ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சீனாவின் நேரடி அதிகார கட்டுப்பாட்டிற்குள் செல்கிறதா இலங்கை? - ரணில் விக்ரமசிங்கே பரபரப்பு தகவல்.!
![SriLanka Former Prime Minister Ranil Wickremesinghe Speech](https://cdn.tamilspark.com/large/large_ranil-a-47796-1200x630.png)
இலங்கை சீனாவுடன் அல்லது பிற நாட்டிடம் ஒப்படைக்கப்படவில்லை என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தால் பாதித்து இன்று திவாலாகும் நிலைக்கு வந்துவிட்டது. அழிவுப்பாதையில் செல்லும் அரசை எதிர்த்து இலங்கை மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அன்று தமிழர்களை கொன்று குவித்த அசுரர்களுக்கு தக்க தண்டனை கிடைத்துள்ளதாக தமிழகம் மற்றும் தமிழீழ மக்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொழும்புவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, "ஸ்ரீலங்காவில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இடையில், சீனா இலங்கையில் நிறைவேற்றக்கூடிய சில திட்டங்களினை வைத்துள்ளது. இலங்கை சீனாவுடன் அல்லது பிற நாட்டிடம் ஒப்படைக்கப்படவில்லை.
இந்தியாவின் எரிபொருளுக்கான கடன் வாரியானது மே மாதம் 1 ஆம் வாரத்தில் தீர்ந்துவிடும். இதனால் மற்றொரு நெருக்கடி அதிகரிக்க தொடங்கியுள்ளது. எரிபொருள் கடன் வரியை நீடிக்குமாறு இலங்கை இந்தியாவிடம் கேட்டுக்கொண்டது. அதற்கு பதில் நல்ல விதமாக வந்ததாக தெரியவில்லை. இலங்கை அரசும் தன்னை திவாலானதாக அறிவித்துள்ள நிலையில், சிக்கல்கள் அதிகரித்துள்ளன" என்று தெரிவித்தார்.