போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை - இலங்கையில் அமலானது அதிரடி சட்டம்...!



Srilanka Govt Announce Drug smuggling Death Sign

பொருளாதார பிரச்சனைகளை சந்தித்துள்ள இலங்கை அரசு, போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டு உலகளாவிய கடுமையான பிரச்சனையாக தலைதூக்கியுள்ளது. சட்டவிரோத செயலை செய்யும் கும்பல் பணத்திற்காக போதைப்பொருட்களை தங்களின் நாடுகளைவிட்டு பிற நாடுகளுக்கு கடத்தி மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருகிறது.

இவர்களின் கொட்டதினை ஒடுக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயலாற்றினாலும், போதைப்பொருள் கும்பல் தங்களின் செயலை குறைக்காமல் செயலாற்றி வருகிறது. பல நாடுகளில் போதைப்பொருள் கும்பலை பிடிக்க அதிரடி சண்டையும் நடக்கிறது. சட்ட திட்டங்களும் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அந்நாட்டின் அரசு உடனடி சட்டத்தினை அமல்படுத்தியுள்ளது. போதைப்பொருள் வைத்த குற்றச்சாட்டில் கைதாகி, அவரின் குற்றம் நிரூபணம் செய்யப்படும் பட்சத்தில் குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.