திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மொத்தமும் காலி., சீனாவின் திட்டம் சக்ஸஸ். திவாலாகிறது இலங்கை?...!
கொரோனா வைரஸ் பரவலின் இலங்கையின் உற்பத்தி மற்றும் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மொத்த வருவாயில் 10 % பங்கை தரும் சுற்றுலாத்துறையும் முடங்கியுள்ளது. இதனால் அரசின் வரிவசூல் சரிவை சந்தித்துள்ளது.
ஜி.டி.பி தொடர் சரிவின் காரணமாக கடன், வட்டி சுமை அதிகரித்து, மொத்த கடன் சுமை 7.3 மில்லியன் அமெரிக்க டாலராக (இலங்கை மதிப்பில் ரூ.1 இலட்சத்து 48 இலட்சம் கோடி) உள்ளது. கடந்த நவ. மாதத்தின் நிலவரப்படி அந்நிய செலாவணி ரூ.32 ஆயிரம் கோடி கையிருப்பில் உள்ளது என அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்தது.
அந்நிய செலவாணி குறைவாக இருப்பது, கடன் சுமையை மேலும் அதிகரித்துள்ளது. இலங்கையை பொறுத்த வரையில் இயற்கை வளம் அதிகளவில் இருப்பதால், உணவுப்பஞ்சம் என்ற பிரச்சனை பெருமளவில் இல்லை. ஆனால், அந்நிய செலவாணி, கடன் சுமை பிரச்சனையால் வெளிநாட்டில் இருந்து உரம் இறக்குமதி செய்ய அந்நாட்டு அரசு தடை விதித்தது.
இதனால் இயற்கை விவசாயம் முன்னேறும் என்று எதிர்பார்த்த போதிலும், போதிய திட்டமிடல் இல்லாத காரணத்தால் வழக்கமாக 40 மூட்டைகள் நெல் விளைச்சல் கிடைத்த இடங்களில் 15 மூட்டைகள் மட்டுமே நெல் விளைச்சல் கிடைத்துள்ளது. விலைவாசியும் உயர தொடங்கியுள்ளது.
உள்ளூர் கடைகளில் ரூ.50 க்கு விற்பனை செய்யப்பட்ட தேநீர் ரூ.70 க்கும் (இந்திய மதிப்பில் ரூ.26), கேரட் ரூ.560 க்கும் (இந்திய மதிப்பில் ரூ.205), பச்சை மிளகாய் ரூ.1000 க்கும் (இந்திய மதிப்பில் ரூ.366) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நெருக்கடியான சூழலில் ரூபாய் நோட்டையும் இலங்கை அரசு வெளியிட்ட காரணத்தால் பணவீக்கமும் அதிகரித்துள்ளது.
பாலில் இருந்து பெட்ரோல் வரை ஒவ்வொரு விலையும் உயர்ந்துள்ள காரணத்தால், அந்நாட்டு மக்கள் 2 வேலை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 5 இலட்சம் மக்கள் இலங்கையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள நிலையில், தற்போதைய நிலையினால் அவை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு பொருட்களின் விலையை நிர்ணயம் செய்துள்ள இலங்கை அரசு, அதனை வியாபாரிகள் குறித்த விலைக்கு மக்களிடம் வழங்குகிறார்களா? என்பதை கண்காணிக்க இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இலங்கை சீனா வீசிய கடன் வலையில் சிக்கியுள்ள காரணத்தால், தற்போது முடிவு கட்டத்தை நெருங்கி திவாலாகும் நிலை வந்துள்ளது.
மேலும், சீனாவின் உதவி இலங்கைக்கு முதலில் இருந்ததால் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உட்பட அமெரிக்காவின் நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்து உதவியை பெற முடியாத சூழலை உருவாக்கிக்கொண்ட இலங்கை, தற்போது இந்தியா மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளின் உதவியை எதிர்பார்த்து காத்துள்ளதாகவும் தெரியவருகிறது.