தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
திவால் பிரச்சனையால், மக்களின் தங்க ஆபரணத்தை குறிவைக்கும் இலங்கை அரசு?.. பகீர் தகவல்.!
கடன் பிரச்சனையினால் இலங்கை அரசு திவாலாகும் நிலையில் உள்ளதால், அதனை மீட்டெடுக்க அந்நாட்டு அரசு முயற்சிக்கிறது. சீனாவிடம் வாங்கிய கடனை அடைக்க இந்தியா மற்றும் பிற நாடுகளிடம் கடன் பெற்று வருகிறது.
இலங்கையில் எரிபொருள், உணவு போன்று ஒவ்வொரு அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. கட்டாய மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்நாட்டு அமைச்சர் பேசிய தகவல் இலங்கை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"வடகொரியா கடந்த காலங்களில் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியை சந்தித்தபோது, அந்நாட்டு மக்கள் தங்களின் நகைகளை அரசிடம் கொடுத்து பொருளாதாரத்தை மீட்டனர். அதனை மறக்க வேண்டாம்" என அமைச்சர் சி.பி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கை மக்கள் வாங்கி வைத்துள்ள நகைகள் அரசிடம் ஒப்படைக்கவேண்டிய சூழ்நிலை வரலாம் என அஞ்சப்படுகிறது.