திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஐயையா உச்சா போயிட்டாரு... பொது நிகழ்ச்சியில் பேண்டிலேயே சிறுநீர் கழித்த சூடான் அதிபர்... வைரல் வீடியோவால் பத்திரிக்கையாளர் 6 பேர் கைது...
அரசு சார்ப்பில் நடத்தப்பட்ட பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சூடான் அதிபர் தான் அணிந்திருந்த பேண்டிலேயே மேடையில் சிறுநீர் கழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு நிகழ்ச்சி ஒன்றில் தெற்கு சூடான் அதிபர் சல்வா கீர் பங்கேற்று உள்ளார். அப்போது அங்கு தேசிய கீதம் ஒலித்துள்ளது. அந்த சமயத்தில் அனைவர் முன்பு அதிபர் சல்வா தான் அணிந்த பேண்டிலேயே சிறுநீர் கழித்த நிகழ்வு அங்கு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் ஊடாகங்களில் ஒளிபரப்பு செய்யப்படவில்லை என்றாலும் குறித்த வீடியோவானது சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகியுள்ளது. இதனையடுத்து அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் 6 பேரை கைது செய்துள்ளது அந்நாட்டு அரசு. இந்நிகழ்வு அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.