ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
விவசாய நிலத்தில் கேட்ட திடீர் சத்தம்!! ஓடிச்சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
விவசாய நிலத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.
மெக்ஸிகோவில் பியூப்லா மாகாணத்தில் உள்ள சாண்டா மரியா என்ற இடத்தில் அமைந்துள்ள விவசாய நிலம் ஒன்றில் திடீரென பெரிய பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. சுமார் 300 அடி அகலமும் 60 அடி ஆழமும் கொண்ட இந்த திடீர் பிரமாண்ட பள்ளத்தை பார்த்து அங்கிருந்த மக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், இடி இடித்தது போல் திடீரென பெரிய சத்தம் கேட்டதாகவும் பின்னர் விவசாய நிலத்திற்கு வந்து பார்த்தபோது இதுபோன்ற பெரிய பள்ளம் இருந்ததை பார்த்து தாங்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறியுள்ளனர்.
இந்த திடீர் பள்ளம் குறித்து கருத்து கூறியுள்ள ஆராய்ச்சியாளர்கள், "குறிப்பிட்ட இடத்திற்கு கீழே பாறைகள் குறைவாக இருப்பதாலும், திடீரென ஏற்பட்ட நீரோட்டம் காரணமா இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் தெரிவித்துள்ளனர்".
இந்த பள்ளம் குறித்த தகவல் அந்த பகுதி முழுவதும் தீயாக பரவியதை அடுத்து, அந்த பகுதி மக்கள் சற்று தூரமாக நின்று அந்த பள்ளத்தை பார்த்து செல்கின்றனர்.