மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பல பேர் கூடிய திருமண மண்டபத்தில் தற்கொலை படை தாக்குதல்!. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே உள்ள யுரேனஸ் திருமண மண்டபத்தில் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூறும் வகையில் இஸ்லாமிய சமய அறிஞர்களின் தலைமையிலான கூட்டம் கூடியிருந்தது. அங்கு ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கொண்டுவந்த வெடிபொருட்களை வெடிக்க செய்து தாக்குதல் நடத்தியுள்ளார். அங்கு நடந்த
தற்கொலைப்படை தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மேலும், 70க்கும் மேலானோர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தை யார் செய்தது என இதுவரை தெரியவில்லை.
படுகாயமடைந்தவர்களில் பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.