தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கொரோனாவை எதிர்த்து ஒற்றுமையுடன் போராடுவோம்.. இந்தியாவிற்கு ஆதரவளித்து சுவிட்சர்லாந்து செய்த காரியம்!
இந்திய மக்களுக்கு நம்பிக்கை அளிக்கவும் இந்தியாவுடன் இணைந்து கொரோனாவை அழிக்கும் நோக்கத்துடன் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலையில் இந்தியாவின் தேசிய கொடி ஒளிர்விக்கப்பட்டது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸினை எதிர்த்து போராட பல நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட துவங்கியுள்ளன. மருத்துவ உபகரணங்கள், சோதனை கருவிகள், மாத்திரைகள் போன்றவை நாடுகளுக்கு இடையே பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுவிட்சர்லாந்து தனது ஆதரவினை உலக நாடுகளுக்கு வித்தியாசமான முறையில் செயல்படுத்தி வருகிறது. தனது நட்பு நாடுகளின் தேசிய கொடிகளை 14,692 அடி உயரமுள்ள புகழ்பெற்ற மாட்டர்ஹார்ன் மலையில் ஒளிர்வித்து வருகின்றது.
அதனடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவில் இந்தியாவின் மூவர்ண தேசிய கொடி ஒளிர்விக்கப்பட்டது. இதற்கு முன்னர் ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் கொடிகள் ஒளிர்விக்கப்பட்டன.
Switzerland expresses solidarity with India in its fight against #COVID19. Swiss mountain of #Matterhorn lit in tricolour. Friendship from Himalayas to Alps 🇮🇳🏔🇨🇭
— Gurleen Kaur (@gurleenmalik) April 18, 2020
Thank you @zermatt_tourism#Together_against_Corona @IndiainSwiss @MEAIndia @IndiaUNGeneva pic.twitter.com/O84dBkPfti