மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஐ.எஸ்.கே பயங்கரவாதிகளை ஒழிக்க தற்கொலைப்படையை இராணுவத்தில் சேர்த்துள்ள தலிபான்..!
ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளிகளில் மாணவ - மாணவியர்கள் சேர்ந்து படிக்க கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றும் போது ஏற்பட்ட பிரச்சனை, தலிபான்கள் Vs ஐ.எஸ் என்ற சண்டையை ஏற்படுத்தியது. இதனால் தாலிபான்களுக்கு ஐ.எஸ்.கே பயங்கரவாதிகள் பெரும் அச்சுறுத்தலாக திரும்பியுள்ள நிலையில், தலிபான் படையினரை தாக்கியும் வருகின்றனர்.
தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முன்னர், தற்கொலைப்படை பிரிவும் பயங்கரவாதிகளால் செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்கொலைப்படை அமெரிக்கா, ஆபாக்கினிய இராணுவத்தினருக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதும் பரவலாக செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் கொட்டத்தை முடிவிற்கு கொண்டு வர தற்கொலைப்படையினர் ஈடுபடுத்த முடிவு செய்து, அவர்களை இராணுவத்தில் தலிபான் அரசு சேர்த்து வருகிறது.