தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
எங்களுக்கு முக்கிய கூட்டாளியும், எங்களுக்கு பக்கபலமாக இருப்பதும் இந்த நாடு தான்.! உண்மையை போட்டுடைத்த தலீபான்கள்.!
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் தலிபான்களுக்கு பயந்து வெளிநாட்டவர்களும், சொந்த நாட்டவர்களுமே நாட்டை விட்டு வெளியேற முயற்சித்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையிலும் அமெரிக்க படைகள் வெளியேறியுள்ள நிலையிலும் அங்கு மோசமான சூழல் நிலவுகிறது.
ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வெளியேறுவதாக அறிவித்தபின், தலிபான் தீவிரவாதிகள் ஆப்கனின் பல மாகாணங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலீபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறுகையில், சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஒரு அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.