மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துபாயில் பயங்கரம்.. குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ.. கேரளாவை சேர்ந்த தம்பதி உட்பட 16 பேர் பலியான சம்பவம்..!
துபாயில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த தம்பதி உட்பட 16 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மல்லபுரம் பகுதியை சேர்ந்த கலங்கந்தன் ரிஜேஸ் மற்றும் அவரது மனைவி ஜிஷி ஆகியோர் தனது குடும்பத்துடன் துபாயில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென அவர்கள் தங்கி இருந்த குடியிருப்பு வளாகத்தில் பற்றிய திடீர் தீயினால் ஏற்பட்ட புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுத்திணறி ரிஜேஸ் - ஜிஷி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் பலியானவர்களில் 14 பேர் சூடான் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கோர தீ விபத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட காவலர் ஒருவரும் பரிதாபமாக பலியாகி உள்ளார். இந்நிலையில் மின் கசிவின் காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் தீ விபத்தில் பலியான ரிஜேஸ் - ஜிஷி ஆகிய இருவரது உடல்களும் நாளை கேரளா கொண்டு வர இந்திய தூதரகம் மூலமாக முயற்சி மேற்கொள்ளப்பட்ட வருவதாக சொல்லப்படுகிறது.